மிகச்சிறந்த சிறுகதைப் படைப்பாளி சூடாமணி பிறந்த தினம் இன்று

0
181

ஆர்.சூடாமணி 10.01.1931-ல் சென்னையில் பிறந்தார். மிகச்சிறந்த படைப்பாளி பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை என்றாலும், தன் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவு ஆங்கில மொழித்திறம் உடையவர். இவருடைய சிறுகதைப் படைப்புகள் தினமணி கதிர், தினமலர், தீபாவளி மலர், அமுதசுரபி, கல்கி, புதிய பார்வை, கணையாழி, சௌராஷ்டிர மணி, மஞ்சரி, சதங்கை, இந்தியா டுடே ஆகிய இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்துள்ளன.மொத்தம் 600 சிறுகதைகளுக்கு மேல் படைத்துள்ளார். இவர் படைத்த சிறுகதைகள் 19 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சூடாமணியின் கதைகள் நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.சிறுகதை, புதினம், குறும்புதினம், நாடகம் ஆகிய நான்கு துறைகளிலும் இதுவரை 37 நூல்கள் படைத்துள்ளார். இவருடைய சில சிறுகதைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here