#சுவாமி_விவேகானந்தர் #தேசிய_இளைஞர்_தினம்

0
132

சுவாமி விவகானந்தர் கொல்கத்தாவில் 1863- ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பிறந்தார் இயற்பெயர் நரேந்திரன். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். இவர் சிறுவயது முதல் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்லி வளர்க்கப்பட்டார். அப்போதே தியானம் செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.சில நேரங்களில் ஆழ்ந்த நிலைக்கு சென்றுவிடுவதால் மிகவும் சிரமப்பட்டே அவரை விழிப்படையச் செய்ய வேண்டியிருந்தது. குருவால் “விவேகானந்தர்” என்று பெயர் சூட்டப்பட்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு யாத்திரை மேற்கொண்டார். 14 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.1892-ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அவரது நினைவாக அந்த பாறை விவேகானந்தர் நினைவிடமாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.ராமநாதபுர மன்னன் பாஸ்கர சேதுபதி மூலம் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு “அன்புள்ள சகோதர, சகோதரிகளே” என்று பேச்சை தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.இதேபோல் பல்வேறு நாடுகளில் வேதாந்த கருத்துகள் பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார். உலக அரங்கில் இந்து மதத்தின் புகழை தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தினார். அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, உறங்கிக் கிடந்த இந்திய இளைஞர்களை விழிப்படைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ”எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களைச் செய்வீர்கள். பயம் தோன்றினால் அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி விடுவீர்கள். பயமே உலகத் துன்பங்களுக்குக் காரணம். இந்தப் பயம் தான் நம் துயரங்களுக்கு எல்லாம் காரணம்.19 அடுக்கு மாடி, விலையோ பல கோடி… ஒரு செக்கண்டில் இடித்து தள்ளிய அதிகாரிகள்… வீடியோ பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு அளிக்க வல்லது. மூட நம்பிக்கைகள் அனைத்திலும் கொடியது பயமே” என்று இளைஞர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வந்தார். கொல்கத்தாவில் ராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here