அயோத்தி: 6 மொழியில் சிறப்பு வானிலை இணையதளம்

0
113

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வானிலை நிலவரங்களை மட்டும் கூறும் வகையில், சிறப்பு வானிலை இணையதளத்தை (https://mausam.imd.gov.in/ayodhya/) இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கி உள்ளது. இந்த வானிலை இணையதளத்தில், வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றின் திசை, காற்றின் வேகம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியாகும். அயோத்தி, பிரயாக்ராஜ், வாராணசி, லக்னோ, புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளின் வானிலை நிலவரங்கள் வெளியிடப்படும். உலகில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், உருது, சீனம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் வானிலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here