இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிப்பு

0
417

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட கலைஞர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். திட்டத்தின் தன்னார்வலர்களை சந்தித்தார். மேலும், 25 நாடுகளைச் சேர்ந்த யூத் எக்ஸ்சேஞ்ச் திட்ட கேடட்கள் மற்றும் குடியரசு தின விழாவின் பழங்குடியின விருந்தினர்களையும் சந்தித்தார்.தொடர்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினமான நேற்று பெண் குழந்தைகளின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “சமூகத்திலும், நாட்டிலும் மாற்றங்களை கொண்டு வரும் ஆற்றல் பெண்களிடம் உள்ளது. ஆகவே, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறரார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here