குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

0
375

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், வரிக்குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம், அதற்கு பிரதமர் மோடியின் பதில் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here