குடியுரிமை வழங்கும் சட்டத்தின் (CAA) விதிகள் நாடாளுமன்றத் தேர்தல் முன்பு வெளியிடப்படும்

0
56

குடியுரிமை வழங்கும் சட்டத்தின் (CAA) விதிகள் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பதற்கு முன்பு மார்ச் முதல் வாரத் தில்லேயே வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே பாகிஸ்தான் & ஆஃப்கானிஸ்தான் & வங்கதேசத்திலிருந்து மத அடிப்படையில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி பாரதத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ஹிந்து சீக்கிய ஜைன புத்த பார்ஸி & கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை வழங்கிட 2019 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.குடியுரிமை வழங்கிடத் தேவைப்படும் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை அமைச்ச கம் இதற்கென தனியான தொரு ஆன் லைன் போர்டல் உருவாக்கி வருகிறது.
2014 டிசம்பர் 31க்குள் பாரதத்திற்குள் குடியேறி இருக்க வேண்டும்.பொது சிவில் சட்டம் நாடாளுமன்றத் தேர்தலிலுக்குப பிறகு அமுல் படுத்தப் படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here