நீலகண்ட பிரம்மச்சாரி 4 டிசம்பர் 1889 ஆம் ஆண்டில் சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் பிறந்தார். மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்.
இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர்.
வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர்.
அதே காலத்தில் நீலகண்டர், இரகசிய இயக்கமான ‘அபினவ பாரத இயக்கத்தைத்’ 1907ஆம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார்.
நீலகண்டனை ஆங்கிலேயே உளவுக் காவல்துறையினர் இரகசியப் கண்காணிக்கத் தொடங்கினர்.
இவர் தன் பெயரோடு ‘பிரம்மச்சாரி’ எனும் பெயரை இணைத்துக் கொண்டார். “சூர்யோதயம்” எனும் பத்திரிகையை தொடங்கினார்.
பாரதியின் நெருங்கிய நண்பர். 1931ஆம் ஆண்டில் துறவறம் பூண்டு, டிசம்பர் 1933இல் மைசூர் சமஸ்தானத்தில் நந்தி கிராமம் அருகே சென்னகிரியில் ஓம்கார் எனும் பெயரில் ஆசிரமம் அமைத்தார்.
#neelakandabrahmachari #சான்றோர்தினம்