இனி வீட்டில் இருந்தபடியே ராமர் கோவில் பூஜையை தரிசனம் செய்யலாம்!

0
311

அயோத்தியில் உள்ள இராமர் கோவிலில் தினசரி காலையில் நடைபெறும் பூஜையை, தூர்தர்ஷன் நேஷனல் நேரடியாக ஒளிபரப்புவுள்ளது

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், கடந்த 22-ஆம் தேதி குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு, கோவில்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

பிரான பிரதிஷ்டை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து, குழந்தை இராமரை தரிசனம் செய்வதற்காக, லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் கோவிலுக்கு வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தியில் உள்ள இராமர் கோவிலில், தினசரி நடைபெறும் பூஜையை தூர்தர்ஷன் நேஷனல் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. அதன்படி, கோவிலில் தினசரி காலை 6.30 மணிக்கு நடைபெறும் பூஜை நேரடியாக ஒளிபரப்பப்படும். இனி பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே, குழந்தை இராமரை தரிசனம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here