ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ப்ரதிநிதி சபா (பொதுக் குழு) மார்ச் 15-17 ஆகிய 3 நாட்கள் நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் நடை பெறுகிறது. அங்குள்ள மஹரிஷி தயானந்த ஸரஸ்வதி மண்டபத்தில் 3 நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பாரத கலாச்சாரம், ஆர்.எஸ்.எஸ். பற்றிய கண்காட்சியை அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹோசபாலே 14 மார்ச் (இன்று) காலை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் சுனில் அம்பேகர், சஹ ப்ரச்சார் ப்ரமுகர்கள் நரேந்திர குமார் & அலோக் குமார் உடன் இருந்தனர்.
#abpsnagpur2024
Home Breaking News RSS – கண்காட்சியை அகில பாரத பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹோசபாலே ஜி குத்து விளக்கேற்றி...