டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட பாரத கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இது டெல்லியில் கட்டப்பட்டுள்ள பாரத கடற்படையின் முதல் தலைமையகம் ஆகும்.
முன்னதாக, கடற்படை 13 வெவ்வேறு இடங்களில் இருந்து செயல்பட்டது. தற்போது, ‘நௌசேனா பவன்’ (Nausena Bhawan) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வளாகமாக கட்டப்பட்டுள்ளது.
நான்கு தளங்களில் மூன்று தனித்தனி பிரிவுகளைக் கொண்ட இந்த கட்டடம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த சமீபத்திய கட்டுமான தொழில்நுட்பங்களை கொண்டு கட்டப்பட்டது.
இக்கட்டத்தில், சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் உள்ளது. உட்புறத்தில், மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற பிளாஸ்மா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பால், வசதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பு சேவைகள் மற்றும் பயன்பாட்டு அமைப்புகளின் திறமையான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்கிறது.