மஹாராஷ்டிராவில் போலீஸ் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

0
183
மஹாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில், நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில், 36 லட்சம் ரூபாய் தலைக்கு விலை வைத்து உயிரிழந்த நான்கு பேரையும் தேடி வந்தது தெரியவந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here