‘ஜெய் ஹனுமன்’ இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர்!

0
183

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.

இதற்காக வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு வந்து அவர்கள் அணிகளுடன் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.

இதற்காக இரண்டு அணி வீரர்களும் விசாகப்பட்டினத்தில் உள்ளனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் விசாகப்பட்டினத்தில் ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்து தனது சமூக வலைத்தளத்தில் ஜெய் ஹனுமன் என்ற ஹாஷ்டகை பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமர் கோவில் திறக்கப்பட்டது போதும் ஜெய் ஸ்ரீ ராம் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here