ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் திரு.சங்கர சுப்பிரமணியன் காலமானார் !

0
421

சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கும், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினருமான திரு W.H. சங்கர சுப்பிரமணியன் நேற்று (19-04-2024) நள்ளிரவில் சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1961ல் பிறந்த அவர் வேலூரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வேலூர் ஜில்லா கார்யவாஹ் ஆக சங்க பணி புரிந்தார்.

பின் 1990ல் பிரச்சாரக்காக வந்தார். 1990 முதல் 93 வரை சென்னை பாக் பிரச்சாரக்; 93 முதல் 97 வரை வேலூர் ஜில்லா பிரச்சாரக்; 97 முதல் 99 வரை தர்ம ஜாக்கரன் மாநில அமைப்பாளர்; 97 முதல் பாரதிய மஸ்தூர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் தற்போது அகில பாரத செயற்குழு உறுப்பினராக (அமைப்பு சாரா பிரிவுகள் பொறுப்பு) இருந்தார்.

அன்னாரின் பூத உடலானது 20-04-2024 சனிக்கிழமை மதியம் 3 மணி வரை சென்னை சக்தி கார்யாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்

மதியம் 3.15 மணிக்கு தேக தானம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here