பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு போக்ஸோ !

0
165

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் தேவஇரக்கம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வேங்கடசன்பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் தனது அப்பா மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார்.

சிறுமியின் தந்தை கிறித்துவ தேவாலயத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அந்த தேவாலயத்தில் பாதிரியாராக தேவஇரக்கம் என்பவர் ஊழியராக இருந்து வருகிறார். இந்நிலையில் அச்சிறுமி தேவாலயத்தில் ஒரு வாரம் தங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் சிறுமி தூங்கி கொண்டிருந்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here