ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினம்!

0
94
ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சர்வாதிகார மனப்பான்மையுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

எந்தவொரு தவறும் செய்யாத போதிலும், அவசர நிலையின்போது லட்சக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஊடகத்தின் குரல் ஒடுக்கப்பட்டதாகவும் அந்த செய்திக் குறிப்பில் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அவசர நிலையின்போது மனிதாபிமானமற்ற முறையில் வேதனையை அனுபவித்த நபர்களை இந்த தினத்தில் நினைவுகூர்வோம் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here