ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே பண்பாடு. இது வெறும் முழக்கம் அல்ல -அருண் குமார்

0
95

ஆர்.எஸ்.எஸ்-ன் அகில பாரத இணைச் செயலாளர் ஸ்ரீ அருண்குமார் பேசும்போது “சங்கத்தில் சில ஆழ்ந்த நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையில் நாம் சிந்தனை செய்யும் பொழுது இங்கு ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரு பண்பாடு ,என்ற உணர்வு நம்மிடம் ஏற்படுகிறது. ஒரே நாடு ஒரே மக்கள் என்பது சங்கத்தின் உறுதியான நம்பிக்கையே அன்றி அறைகூவல் இல்லை. வடக்கு, தெற்கு எண்ணமும் பல்வேறு விதமான மத வழிபாடுகள், சம்பிரதாயங்கள் என இருக்கும் பொழுது எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே பண்பாடு கொண்டதாகும். நாம் பலவிதமான வேலைகள் செய்தாலும் பல்வேறு எண்ணங்களும் வேலைகளும் கொண்டிருந்தாலும் இந்த அடிப்படையானது ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒன்று என நம்முடைய கற்பனை இருக்கிறது. நமது இந்த கற்பனையானது பின்னாளில் ஆங்கில அரசு வந்த பின் அரசு ,அரசன் பேரரசு எனவும் படிப்படியாக இன்றைய தேசம், நாடு, மாநிலம் என்ற எண்ணம் வந்தது. நமது தேச கற்பனை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் அடிப்படையான ஒன்றை நாம் பிரிவுகள் சில இருந்தாலும் கூட ஒன்றாக பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது . வாழ்வின் லட்சியம் என்பது புற உலக வாழ்க்கையிலன்றி நமது ஆன்ம விடுதலைக்கான வாழ்வு என்ற இந்த தத்துவம் தான் காலம் காலமாக நமக்கு அடிப்படையாக இருந்து வந்திருக்கின்றது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here