தன் தாய் நாட்டிற்காக தன் உயிரையே கொடுப்பேன் என்று வாழ்ந்த ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று

0
168
1755 – ல் கிழக்கிந்திய கம்பெனியும் மொகலாய மன்னர்களும் தொடுத்த போரை பாளையத்தின் எல்லையிலேயே விரட்டியடித்தார் ஒண்டிவீரன்.
பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த யுத்தத்தில் தோற்று ஓடிய ஆங்கிலேயன் நெற்கட்டும் செவ்வலை தாக்க வந்தபோது ஒண்டிவீரன் தன் மக்களோடும், பூலித்தேவன் வாரிசுகளோடும் பாளையத்திலிருந்து வெளியேறினார்கள்.
உங்களில் எவனாவது வீரனாக இருந்தால் எங்கள் முகாமிற்குள் நுழைந்து பட்டத்து குதிரையையும், வாளையும் எடுத்துக்கொண்டு வெங்கல நகராவையும் ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுவோம் என்று கூறினர் ஆங்கிலேயர்கள்.
இதுதான் தருணம் என்று ஒண்டிவீரன் காலணிகளை செப்பனிடக்கூடியவர்களுடன், சில நாட்கள் தங்கி பட்டத்து குதிரை,வாள், வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும் மணி ஒலித்தவுடன் பீரங்கிகள் தாக்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை கண்ட ஒண்டிவீரன்.
அமாவாசை நாளை தேர்ந்தெடுத்து பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கம் திருப்பி வைத்து தடுக்க முயன்ற வீரர்களை குத்திக் கொன்றார். குதிரையில் செல்ல முயன்ற போது குதிரை கனைத்ததை கேட்டு வீரர்கள் ஓடிவந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்கு தீனி போடும் வைக்கோலில் மறைந்து கொண்டார்.
வீரர்கள் குதிரையை காடியில் கட்ட ஈட்டி ஆராய்ந்தபோது ஒண்டிவீரன் கையும் சேர்த்து அறையப்பட்டது. ஈட்டியில் இருந்து கையை பிடுங்காமல் தன் கையை தானே வெட்டிக் கொண்டு வெண்கல நகராவை ஒலித்துவிட்டு புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன்.
தன் மண்ணை மீட்டெடுக்க கை மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன் என்று வாழ்ந்தவர் மாவீரன் ஒண்டிவீரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here