ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5 அம்சங்கள் குறித்து ஆலோசனை – சுனில் அம்பேகர்

0
59

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா  குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நாளை தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-வுடன் தொடர்புடைய 32 அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேட்கர், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து அமைப்புகளிலிருந்து 320 நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், சமூக ஒற்றுமை, குடும்ப முறைகளை பேணுதல் உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் குறித்து மக்களிடம் எடுத்து செல்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று சுனில் அம்பேகர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here