ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

0
58
பாலக்காடு , கேரளா, 31 ஆகஸ்ட் 2024
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாலக்காட்டில் துவங்கியுள்ளது, இது செப்டம்பர் 2 வரை நடைபெறும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன் ஜி பாகவத், பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே, 6 இணை பொதுச் செயலாளர்கள் மற்றும் அகில பாரத அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள். ராஷ்ட்ரீய சேவிகா சமிதி தலைமை நிர்வாகி சாந்தா அக்கா, செயலாளர் சீதா அன்னதானம், வனவாசி கல்யாண் ஆஷ்ரம் தலைவர் ஸ்ரீ சத்யேந்திர சிங், பூர்வ சைனிக் சேவா பரிஷத் தலைவர் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சதுர்வேதி, அகில பாரத க்ராஹக் பஞ்சாயத் தலைவர் ஸ்ரீ நாராயண் பாய் ஷா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்ரீ அலோக் குமார் , முக்கிய நிர்வாகி ஸ்ரீ பஜ்ரங் பாக்டா, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முக்கிய நிர்வாகி ஸ்ரீ ஆஷீஷ் சவுகான், பாஜக தலைவர் ஸ்ரீ ஜெகத் பிரகாஷ் நட்டா, முக்கிய நிர்வாகி ஸ்ரீ பி.எல். சந்தோஷ், வித்யா பாரதி தலைவர் ஸ்ரீ ராமகிருஷ்ண ராவ், பாரதீய மஸ்தூர் சங் தலைவர் ஸ்ரீ ஹிரண்மய பாண்ட்யா, ஆரோக்ய பாரதி தலைவர் டாக்டர் ராகேஷ் பண்டித் உள்ளிட்ட, 32 அமைப்புகளின் தேசிய தலைவர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட சுமார் 300 பேர் இதில் பங்கேற்றுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கூட்டத்தின் துவக்கத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும், அங்கு ஸ்வயம்சேவகர்கள் ஆற்றிய சேவை குறித்தும் விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். தேச நலன் சார்ந்த விஷயங்கள், தற்போது நடைபெற்று வரும் முக்கிய நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள், சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். பல்வேறு விஷயங்களில் அனைத்து அமைப்புகளையும் பரஸ்பர ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here