அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) – 70வது அகில பாரத மாநாடு வெற்றிகரமாக நிறைவு

0
139

கோரக்பூர், உத்திரப்பிரதேசம்: நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்ற ABVP-யின் 70வது அகில பாரத மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) நாடு முழுவதும் சமூக, கல்வி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் 70வது அகில பாரத மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.

மாநாட்டினை ZOHO கார்ப்பரேஷன் CEO ஸ்ரீ. ஸ்ரீதர் வேம்பு அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேசிய அவர், “பாரதத்தை விஸ்வ குருவாக்க வேண்டுமென்றால், அது ABVP மாணவர்களால் மட்டுமே சாத்தியமாகும். சுய நம்பிக்கை, சுய உந்துதல் மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய மூன்று முக்கிய குணங்கள், ABVP மாணவர்களுக்கு இயற்கையாகவே உள்ளது,” எனக் கூறினார்.

மாநாட்டில் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய கண்காட்சி இடம் பெற்றிருந்ததுடன், கல்வி மற்றும் சமூக ரீதியாக முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:


தீர்மானம் 1: தரமான கல்வி

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக அறிவியல் மற்றும் திறமையை ஒருங்கிணைக்க வேண்டும். NEP 2020 மூலம் கல்வி தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை ABVP முழுமையாக ஆதரிக்கிறது.

தீர்மானம் 2: கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக நடவடிக்கை

கல்வி கட்டண உயர்வுகளை கட்டுப்படுத்தவும், “கட்டண ஒழுங்குமுறை மசோதாவை” நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தீர்மானம் 3: கலப்பட உணவுகள் மற்றும் இரசாயனங்களுக்கு எதிர்ப்பு

கலப்பட உணவுப் பொருட்களை ஒழிக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

தீர்மானம் 4: சர்வதேச அளவில் பாரதத்தின் தரம்

பாரதத்தின் மென்மையான சக்தி (soft power) உலக அளவில் அதன் பாரம்பரியத்தையும் அறிவியலையும் வளர்க்கும் முக்கிய காரணியாகும். சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரதத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வழிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

தீர்மானம் 5: மணிப்பூர் வன்முறையை தடுக்க நடவடிக்கை

மணிப்பூர் மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளால் அமைதி குறைவது தொடர்பாக, எல்லைகள் முழுவதும் தடுப்புச் சுவர் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மணிப்பூர் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவுதல் முக்கியமானதாகக் கருதப்பட்டது.


பேராசிரியர் யஷ்வந்த் ராவ் கேல்கர் விருது 2024

திரு. தீபேஷ் நாயர் (காது கேளாதவர்களுக்கு உதவும் சேவைகளுக்காக) யஷ்வந்த் ராவ் கேல்கர் விருதைப் பெற்றார். இந்த விருதை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் வழங்கினார்.

தமிழக உறுப்பினர்கள் தேர்வு

  • தேசிய செயலாக்க குழு உறுப்பினர்: செல்வி சுசீலா (திருவாரூர்)
  • தேசிய செயற்குழு உறுப்பினர்கள்: அருண் பிரசாத் (மதுரை), ஹரிகிருஷ்ண குமார் (சிவகங்கை), மங்களேஷ்வரன் (திருச்சி)
  • தென் மண்டல மாணவிகள் பொறுப்பாளர்: திருமதி சவிதா ராஜேஷ் (கன்னியாகுமரி)

ABVP, 55 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக விளங்குகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here