கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

0
19

புனே (டிசம்பர் 16, 2024):

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: “சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை கருத்தில் கொண்டு, சங்கத்தின் கோஷ் (வாத்தியம்) வரலாறை ஒரே இடத்தில் சேகரித்து வழங்கும் இந்த அருங்காட்சியகம் முக்கியமானது. இதன் மூலம் புதிய தலைமுறை சங்க கோஷின் சரியான வரலாற்றை அறிந்து கொள்ளும்.”

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில் பாரதிய கோஷ் அருங்காட்சியகத்தை பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் புனேயில் திறந்து வைத்தார். மோதிபாக் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சங்கத்தின் கோஷுடன் தொடர்புடைய விவரங்கள் மற்றும் இசைக்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கோஷ் தொடர்பான நூல்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இது மட்டுமல்லாமல், கோஷ் ஆராய்ச்சியாளர்களுக்கும் இசை நிபுணர்களுக்கும் இங்கு ஆய்வு மற்றும் படிப்பு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத்  அவர்கள் மேலும் கூறியதாவது: “அனைத்தும் சரியாக சேகரிக்கப்பட்டு, சரியான தகவல்களும் துல்லியமான ஆய்வுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. சங்கத்தின் கோஷ் வரலாறு, பழமையான காலத்தில் இருந்து அது எப்படி மேம்பட்டது என புதிய தலைமுறையினருக்கு தெரிந்துகொள்வது முக்கியம். இதை ஒரே இடத்தில் சேகரிக்க இந்த அருங்காட்சியகம் உதவியுள்ளது.”

அவர் மேலும் கூறினார்: “புராதன பாரதிய இசையில் இருந்து மைதான இசை (Pranganiya Sangeet) முற்றிலுமாக மறைந்துவிட்டது. சங்கத்தின் காரணமாகவே இப்போது மைதான இசை மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது சங்க கோஷின் முக்கிய பங்களிப்பாகும்.”

அருங்காட்சியகத்தின் தலைவர் மோரேஸ்வர் கட்ரே, இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here