அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) திண்டுக்கல் கிளை சார்பாக இன்று (26.12.2024) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
இம்மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மாணவ சமுதாயத்தின் நலனுக்காக ABVP திண்டுக்கல் எப்போதும் உறுதுணையாக செயல்படும் என்றும், இக்கோரிக்கைகள் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.