அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான் என்பது ஐதீகம்.
அலங்காரம்
ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை சங்கு சக்கரம் கதாயுதத்துடன் புறப்பட தயாரானான்.
பரமபத வாசல்
அடியார் புடை சூழ அஷ்டாக்ஷர படி வழி நாழிகேட்டானில் நாழி பார்த்து வழியில் விராஜா நதியில் தன் அடியவர்கள் வைகுண்டம் புக ஏதுவாக அவர்களை சுத்தப்படுத்தி, திரு அணுக்கன் வாயில் வழி மணிக்கதவுகள் திறந்து, பரமபதம் புகுந்தான்.
கொட்டாரத்தில் பத்தி உலா
உள் மணல் வெளி கடந்து திருமாமணி மண்டபம் அமைந்திருக்கும் ஆயிரம் கால் மாண்டபத்தின் மணல் வெளியில் நம்பெருமாள் இங்கும் அங்கும் உலவி கொண்டிருக்கின்றான்.
ஏன் உலவி கொண்டிருக்கின்றான், தன் கொட்டாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் ) பிரிந்து சென்று அவன் ஆளுமைக்குட்பட்ட ஜீவாத்மாக்கள் திரும்ப தன்னிடமே வந்து சேர்ந்து விட்டனவா என்பதை இங்கும் அங்கும் சுற்றி சுற்றி கணக்கு எடுக்கின்றானோ ..?
விருந்தாவனத்தில் மாடுகளை மேய்த்த கண்ணன் மாலையில் தன் மாடுகள் திரும்ப வந்துட்டுவிட்டனவா என்று இப்படிதான் பார்த்திருப்பானோ ! !
மேய்பவனின் கொட்டாரத்திற்கே (வைகுண்டம்) தன் வஸ்துக்களான ஜீவாத்மாவான அடியவர்கள் திரும்பியதை கண்டு ஆனந்தமாக திருமாமணி மண்டபம் புகுந்தான் அரங்கன்…..
ஸ்ரீரங்கம் சத்யா
ரங்கா…. ரங்கா….. ரங்கா…..