இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஓமிக்ரானுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று தடுப்பூசியை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
“தற்போதைய தடுப்பூசிகள் மூன்றாவது டோஸ் பூஸ்டரைத் தொடர்ந்து ஓமிக்ரானிலிருந்து பாதுகாக்கும் திறனைக் கொண்டிருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் ஜான் பெல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்த முடிவுகள் நாடுகளின் தடுப்பூசி உத்திகளின் ஒரு பகுதியாக மூன்றாம் டோஸ் பூஸ்டர்களைப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன, குறிப்பாக ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் உத்தியாக இவை பயன்படும் என்றும் அவர் கூறினார்.