கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இவர்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன