ஹரியனாவில் அல்பத்ரி அணை கட்டப்படவுள்ளதால் பூமிக்கு அடியில் ஓடியதாகக்கருதப்படும் சரஸ்வதி நதிக்கு உயிர் கொடுக்கப்படும் என ஹரியானா முதலவர் மனோஹர்லால் கட்டார் கூறியுள்ளார்.
நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாக கூறப்படும் சரஸ்வதி நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஹரியானா – ஹிமாச்சல பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ள யமுனா நகர் மாவட்டம் அல் பத்ரி சரஸ்வதி நதி உற்பத்தியாகும் இடமாக கருதப்படுகிறது.
இந்த இடத்தில அணை கட்டுவதற்காக இமாச்சல பிரதேச அரசுடன் ஒப்பந்தம் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஹரியானா முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக ருபாய் 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.