அவினாசியில் விஏஒ லஞ்சம் தொடர்பான பட்டியல் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு உள்ளிட்டவற்றுக்கு கிராம நிர்வாக அலுவலர் என்னென்ன லஞ்சம் வாங்குவார் என்ற பட்டியல் ப்ளெக்ஸ் பானரில் அச்சிடப்பட்டு பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.