கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. அங்கு கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதே போல் மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5 ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும், கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு உத்தரபிரதேசத்தில் உள்ள 55 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நாளை நடைபெற உள்ளது.