உக்ரைன் விவகாரம்: புதினுக்கு, பைடன் எச்சரிக்கை

0
372

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று பைடன், புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அப்போது பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here