பெண்கள் உடையில் ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பெண்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் பெண்களிடம் சரியாக நடந்து கொள்வார்கள். பெண்ணுரிமை எது என நாம் நினைப்பதில் தான் பிரச்னை ஏற்படுகிறது.
நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணியக்கூடாது. உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நல்லா படிப்பேன், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை.