‘சாகோ’ துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

0
139

        இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, ‘சாகோ ஸ்னைப்பர்’ என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
      தொலைநோக்கி உதவியால், வெகு தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடுவதற்கு, ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கிகள் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சாகோ நிறுவனம், அதி நவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது.
      ‘சாகோ 338 டி.ஆர்.ஜி. – 42’ ரக ஸ்னைப்பர் துப்பாக்கிகளை, இந்திய ராணுவம் இறக்குமதி செய்துள்ளது. இவை, ஜம்மு – காஷ்மீர் எல்லை, சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு ஆகிய இடங்களில் பணியில் உள்ள ராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here