நேபாள பிரதமர் இந்தியா வருகை 

0
364

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா இந்தியாவில் 3 நாள் பயணம் அவர் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று சந்திக்க இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார். பிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். இதன்பின்பு அவர் வாரணாசி நகருக்கும் செல்கிறார். அவர் பா.ஜ.க.வின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசுகிறார். இந்தியாவுக்கு வருகை தருவது என்பது முன்பே திட்டமிடப்பட்ட பயணம் ஆகும். இந்த பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here