மீண்டும் காஷ்மீர் பண்டிதரிடம் வந்த சாரதா பீடக் கோவில்

0
592

1947ல் நடந்த தேசப் பிரிவினையையடுத்து முஸ்லிம் பழங்குடியினர், பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்களில் பல ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பழமையான சக்தித் தலங்களில் ஒன்றான சாரதா பீடக் கோயிலும் அருகில் இருந்த குருத்வாராவும் சேதமடைந்தன. அன்றிலிருந்து இந்த நிலம் வெறிச்சோடிக் கிடந்தது. சமீபத்தில் காஷ்மீரில் ஏற்பட்டு வரும் பெரிய மாறுதல்கள் இப்பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த தவறவில்லை. 2021ம் ஆண்டில், வருடாந்திர சாரதா பீட யாத்திரை மற்றும் வழிபாட்டிற்காக நீலம் நதியை அடைந்த போது, அங்குள்ள கிராம மக்கள் இந்த நிலத்தை காஷ்மீரி பண்டிட்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, டிசம்பர் 2021ல் இந்த நிலத்தில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்யப்பட்டது. இக்கோயிலை புதுப்பிக்க, சேவ் சாரதா கமிட்டி ஒரு கோயில் கட்டுமானக் குழுவை அமைத்தது. குழுவில் மூன்று உள்ளூர் முஸ்லிம்கள், ஒரு சீக்கியர் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகள் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 28ல் சாரதா கோயில் கட்டும் பணியும் குருத்வாரா கட்டுமானமும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அங்குள்ள உள்ளூர் மக்கள் முழு ஆதரவளிக்கின்றனர். இக்குழுவின் உறுப்பினரானம் அஜாஸ் கான் டிட்வால் கூறுகையில், “நான் சாரதா மந்திர் கட்டுமான குழுவில் உறுப்பினராக உள்ளேன். இந்தக் குழுவில் நாங்கள் மூன்று முஸ்லிம்கள், ஒரு சீக்கியர், ஐந்து பண்டிட்டுகள் ஒன்றாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இங்கு பழைய பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இங்கு, நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here