இந்தியா, அமெரிக்கா இடையேயான ராணுவ உறவு மிகவும் வலுவாக உள்ளது. உலகின் இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான நம்மிடையே இயற்கையான நட்புறவு உள்ளது. இந்த சந்திப்பு நடக்கும் நேரத்தில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமை வருத்தமளிப்பதாக உள்ளது.புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கவலைஅளிப்பதாக உள்ளது. இதற்கு இந்தியா உடனடியாக கண்டனம் தெரிவித்ததுடன், உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரச்னைகள் குறித்து பேசினேன். ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசும்படி அதிபர் புடினை கேட்டுக் கொண்டேன். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படும் என்று முழுமையாக நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறினார். ஜோ பைடன் கூறியது :உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான முறையில் இந்தியா செய்து வரும் உதவிகளை பாராட்டுகிறேன்.போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஏற்படக் கூடிய தாக்கங்களை தொடர்ந்து கண்காணித்து, நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.