இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்து வருகிறது. கடந்த 11ந்தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி நேரில் சென்று வரவேற்றார். இந்த பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெசை சந்திக்க இருக்கிறார் என திருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.