டெல்லியில் வசிக்கும் ராகேஷ் குமார், அஜய் குமார், ரீட்டா தேவி உள்ளிட்ட 5 பேர், உத்தரப் பிதரேச மாநிலம், அசம்கரில் வசிக்கும் கீதா தேவி என்பவருடன் சேர்ந்து அசம்கரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களை பணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை காட்டி மயக்கி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்தகோர் கிராமத்தில் ஒரு மதமாற்ற நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த உள்ளூர் மக்கள் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரையடுத்து காவல்துறையினர் ஆறு மதமாற்ற மாபியாக்களையும் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவர்கள் இதுவரை எத்தனை பேரை மதம் மாற்றியுள்ளனர் என விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்துக்களை மதம் மாற்ற முயன்ற 26 பேர், ஹிந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.