சுடலைமாடன் வேடமணிந்து சங்கு ஒலி எழுப்பி ஆட்சியரிடம் மனு

0
216

சிதம்பரம் நடராஜர் குறித்து யூடியூபர் ஒருவர் யூடியூப் சேனலில் சர்ச்சை கருத்துக்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், இந்துக்கள் தெய்வமாக வணங்கும் நடராஜர் குறித்து அருவறுக்க தக்க கருத்துக்களை வெளியிட்டு வரும் அந்த யூடியூபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சர்ச்சை கருத்தை வெளியிட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here