அடையாள சின்னம் ராமர் பாலம் பின்னர் வந்த வரலாற்று திரிப்பை திருத்துவோமா?

0
403

பாரத தேசத்தில் ஈடு இணையற்ற மிகப்பெரிய காவியம் ராமாயணம். ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. அதற்கு சாட்சிகள் பல இருந்தாலும் முக்கியமானது ராமேஸ்வரமும் ராமர் சேது பாலமும். அந்த ராம சேது பாலம் பற்றி இங்கு நாம் பார்ப்போம்.

Video வடிவில்

பாரத தேசம் பின்னிப்பிணைந்து இருக்க காரணம் இங்கு உள்ள பண்பாடு, கலாச்சாரம், பல அவதார புருஷர்களின் வாழ்க்கை வரலாறு இவை அனைத்தையுமே திரட்டி ஒன்றிணைத்து காட்டிய காவியம் ராமாயணம்.  ராமாயணத்தில் ராமன் இடத்திலிருந்து சீதையை சூழ்ச்சி மூலம் பிரித்து ராவணன் இலங்கைக்கு தூக்கிச் சென்றதும், ஸ்ரீராமன் சீதாபிராட்டியை மீட்க வானரர்களின் துணையோடுமீட்டதும் நாம் அறிவதே. இலங்கைக்கு செல்ல ராமேஸ்வரத்திலிருந்து கட்டிய பாலமே தற்போது இருக்கும் இராம சேது பாலம். இதனை அளிக்கவே சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்க்கு ஹிந்து அமைப்புகள் இந்தப் பாலம் ராமாயணத்தில் தொடர்புடையது. இதனை அளிப்பது என்பது பாரத தேசத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு சமம் என தெரிவித்து பல நடவடிக்கைகளை மூலம் திட்டத்தை கைவிட வைத்தனர்.

பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் இந்த பாலம் தான் ராமர் பாலம்.  பாலத்தை அதன் குறுக்கே கால்வாய் வெட்டப்பட்டு கப்பல் போக்குவரத்து செய்யும் திட்டத்திற்கு பெயர்தான் சேது சமுத்திர திட்டம்.

சமீப காலமாக ராமர் பாலத்திற்கு ஆதம்ஸ் பாலம் என பெயர் சூட்டி இணையத்தில் ராமர் பாலம் பற்றி தேடும்போது அதில் ஆதம்ஸ் பாலம் என்ற பெயரும் சேர்த்து தான் காட்டப்படுகிறது. அதற்க்கு அவர்கள் காரணமாக கூறப்படுவது அரேபிய புராணத்தின்படி 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆதாம் மலை உச்சியை அடைய இந்த பாலத்தை பயன்படுத்தியதாக கூறபடுகிறது. பயன்படுத்தியதற்காக அதன் பெயரை சூட்டி இருக்கின்றனர். ஆதம் மாலை என்பதும் கூட இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதபடுகிறது.

1747 ஆம் ஆண்டு நெதர்லாந்து தயாரித்த வரைபடம் தான் நீங்கள் பார்க்கும் வரைபடம் (வீடியோவில் படம் காட்டவேண்டும்) இதில் ராமர் பாலத்தை ராமர் கோயில் என குறிப்பிட்டு வரைந்துள்ளனர். மேலும் 1767 ஆம் ஆண்டு இந்திய ஆய்வு சின்னத்தின் முத்திரையில் சேது முதல் இமாலயம் வரை என ஹிந்தியில் பொறிக்கப் பட்டிருக்கும்.

இங்க உள்ள பாலம் ராமர் பாலம் தான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? கண்டிப்பாக உள்ளது. இது இயற்கையாக உருவானதல்ல இந்த கட்டுமானம் மனிதரால் உருவாக்கப்பட்டது. என்பதை உளவியல் வல்லுநர் டாக்டர் பத்ரி நாராயணன் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் இறுக்கமான பரப்பில் தான் பவளப்பாறை காணப்படும். ஆனால் இங்கு பவளப் பாறைகளும் கற்களும் கீழே இளக்கமான மண் காணப்படுகிறது. எனவே இந்த பாலம் மனிதர்களால் தானே கட்ட முடியும். கடலின் நீர்மட்டம் குறைவாக இருந்தபோது இப்பகுதியில் இளக்கம் மண் படிந்திருக்கும். அதன் மீது கற்கள் படிந்துள்ளதை பார்க்க முடிகிறது. பொதுவாக இதுபோன்ற காட்சிகளை நதிப் பகுதியில் தான் காண முடியும். இங்கே கடல்பகுதியில் இந்த அம்சம் காணப்படுவது இயற்கையானது அல்ல. வேறு இடத்திலிருந்து தான் இந்த கற்கள் போடப்பட்டுள்ளன. இவற்றை மனிதர்கள் கொண்டு வந்துதான் போட்டிருக்க வேண்டும் என 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசின் நிலவியல் துறை ஆய்வறிக்கையை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிடம் சமர்ப்பித்தது.

மேலும் ஆதாரமாக பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட பராந்தகச் சோழன் காலத்திய தாமிர பட்டயங்களில் அபராஜித வர்மன் சேது தீர்த்தம் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவருடைய ராஜ்யம் விஜய நகரத்திலிருந்து சேது வரை என அவருடைய கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1788 ஆம் ஆண்டு ஜோசப் என்ற வல்லுநர் இந்த பாலத்தை ராமசேது என்றே குறிப்பிட்டுள்ளார். ஆனால் 1804 தயாரிக்கப்பட்ட இந்திய நிலவியல் வரைபடத்தில் ஆதாம் பாலம் என குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தில் 12 மற்றும் 15 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட  ஆயிரக்கணக்கான தங்க வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதில் ராம சேது படமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் சில அரசியல்வாதிகள் ராமரும் இல்லை ராமர் பாலமும் இல்லை என சர்ச்சையை கிளப்பி விட்டனர்.  கருணாநிதி இலக்கியவாதி என்பதாலேயே அவருக்கு தமிழிலக்கியங்களில் உள்ள தேவாரம் நாலாயிர திவ்ய பிரபந்தம் கம்பராமாயணம் ஒட்டக்கூத்தர் எழுதிய உத்தரகாண்டம் திருச்செந்தூர் தலபுராணம். மேலும் பல இலக்கியங்களில் ராமர் பாலம் பற்றிய குறிப்புகள் இருந்து வருகிறது. அதனை அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கிடைத்த ஆதாரங்களும், இலக்கியங்களிலும் ராமர் பாலம் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் இதனை ஏற்க சிலரது மனம் மறுக்கிறது. ராமர் பாலம் இருந்தததால் தான் தமிழகமும் கேரளாவும் காப்பாற்றப்பட்டுள்ளது. என்ன அன்பர்களே ஆச்சரியமாக உள்ளதா? ஆமாம் 2004ஆம் ஆண்டு வந்த சுனாமி தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. லட்சக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் ராமேஸ்வரம் தூத்துக்குடி போன்ற தென் தமிழக நகரங்களில் பெரும் பாதிப்பில்லை மேலும் கேரளா சுனாமி தாக்குதலில் இருந்து தப்பித்தது. அதற்க்கு காரணம் ராமர் பாலம் தான். சுனாமி அலைகளை செயலிக்க செய்து தென் தமிழகத்தையும் கேரளாவின் சில பகுதிகளை காத்தது என உலக புகழ்பெற்ற சுனாமி ஆராய்ச்சியாளர் டாட். மூர்த்தி அவர்கள். சில ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் லக்னோவில் ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் சேது கால்வாய் திட்டத்தைப் பற்றி. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன் பிறகு ராமேஸ்வரம் இராம சேது பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ராமர் பாலத்தை காப்பதற்கான போராட்டங்கள் தீவிர படுத்தப்பட்டன. மேலும் நவம்பர் மாதம் 2007ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் ஆர்எஸ்எஸின் தேசிய செயற்குழு நடந்தது. அதில் ராம சேதுவை பாதுகாக்க நாட்டு மக்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது.

எனவே ராமர் பாலம் இந்துக்களின் உணர்வு, அடையாளம். அங்கு பயணிப்பதற்காக அதனுடைய பெயரை மாற்றி அமைக்க முடியுமா என்ன. ராம சேதுவை பாதுகாப்போம். ஸ்ரீராமரின் அருள் பெறுவோம்.

நன்றி வணக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here