மதுரை சித்திரை திருவிழா

0
215

வணக்கம் மக்களே

பொதுவாக இந்துக்களுக்கு ஐப்பசி மாதத்தில்தான் தீபாவளி ஆனால் மதுரை மக்களுக்கு சித்திரை மாதமும் தீபாவளி தான். அதற்கு காரணம் சித்ரா பவுர்ணமி திருவிழா. மதுரை மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா. ஏனென்றால் அது சைவர்களும் வைணவர்களும் இணைந்து நடத்தும் முக்கியமான திருவிழா. அப்படிப்பட்ட மதுரை சித்திரை திருவிழா பற்றி இந்த காணொளியில் காண்போம்.

Video வடிவில்

அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி பின்வரும் ஒவ்வொரு நாளும் மீனாட்சி பட்டம் பெறுவது. திக் விஜயம் செய்வது பின் சிவனைக் கண்டு நாணம் கொள்ளுதல், திருமணம் நிச்சயித்தல், திருமணத்திற்கு முன் கண்ணூஞ்சல் ஆடல் நிகழ்ச்சிகள் அத்தனையும் நடந்த பிறகு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதோடு திருகல்யாணம் முடியவில்லை.  பிரச்சனைகள் இல்லாத கல்யாணமா என்ன? தங்கையின் கல்யாணத்தைக் காணவரும் அழகருக்கு வழியில் சிறிது தாமதமாகிறது. அதற்குள் இங்கே தங்கையின் திருமணம் முடிந்ததைக் கேள்விப்பட்ட அழகர் கோவம் கொண்டு வைகை ஆற்றில் இறங்குகிறார். மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்த பின் மதுரைக்கு செல்லாமல் அழகர் மலைக்கே திரும்புகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இடையில் மண்டூக மகரிஷி என்ற ஒரு பாத்திரம் இந்தக் கதை நடுவே நாம் பார்த்திருப்போம். அந்த மண்டுக மகரிஷியின் புராணங்களின்படி கூறப்படுவதாவது ஒருகாலத்தில் சுதபஸ் இன்னும் தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் ஆற்றின் கரையில் அமர்ந்து விஷ்ணுவை நினைத்து தவம் இருப்பார். சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் அங்கு வருவார். இதை கவனிக்காத சுதபஸ் முனிவருக்கு மண்டுக போல் அதாவது தவளை போல் கிடக்கும் நீ அதுவாகவே மாறிப்போ என சாபமிட்டார்.

பின்னர் தன்னுடைய தவற்றை உணர்ந்து ரிஷி மன்னிப்பு கேட்பார் சுதபஸ் முனிவர். மனமிரங்கிய துர்வாச முனிவர் தேனூர் வைகை ஆற்றில் தவம் செய், சித்திரா பௌர்ணமி அன்று பெருமாள் இங்கு வரும்போதும் போது உனக்கு விமோசனம் தருவார். என்று சாப விமோசனம் அருளினார்.  அதன்படியே சுதபஸ் முனிவர் மண்டுக வடிவிலேயே தவம் இருப்பார். தன்னுடைய பக்தரின் தவத்திற்கு மனம் இரங்கிய பெருமாள் சித்ரா பௌர்ணமி நாளில் தேனூர் வைகை கரையில் சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் தந்து மோட்சம் தருவார். இதன் காரணமாகவே சித்ரா பௌர்ணமி அன்று தேனூரில் உள்ள வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அது மதுரை வைகை ஆற்றின் கரையில் நடக்கிறது.

அதற்கு காரணமாக கூறபடுவது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் சித்ரா பௌர்ணமி நிகழ்விற்கு தேனூருக்கு வருவார். ஆனால் அங்கு பெருமளவில் மக்கள் கூடி திருவிழாவை காண முடியவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட திருமலை நாயக்கர் மதுரை வைகை ஆற்றின் கரையில் வைத்துக்கொள்ளலாம் என. வேண்டி கேட்டார் ஊர் மக்களும் ஒத்துக் கொள்ளவே.  மாசி மாதத்தில் நடந்த மீனாட்சி கோயில் திருவிழாவும் சித்திரை மாதத்திற்கு மாற்றி தற்போது அது சைவர்கள் வைணவர்கள் இணைந்து நடத்தும் பெரும் திருவிழாவாக இருந்து வருகிறது. மதுரையை சுற்றியுள்ள மக்கள் எங்கிருந்தாலும் சித்திரா பௌர்ணமி அன்று ஊர் வந்து சேர்ந்து விடுவார்.

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டு உடுத்தி வரப் போறாரோ?’ எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இன்று ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ்பெற்றது அலங்காநல்லூர். அந்த ஊருக்கு அலங்காநல்லூர் என பெயர் வர காரணம் என்ன என்று பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அழகர் மலையிலிருந்து தேனூருக்கு போகும்போது அந்த ஊரில் இருந்து அலங்காரம் செய்துகொண்டு புறப்படுவார். அதனால் அந்த ஊர் அலங்காரநல்லூர் என இருந்ததாகவும் அதுவே மருவி காலப்போக்கில் அலங்காநல்லூர் என பெயர் பெற்றது என தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here