குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை அமல்படுத்தியுள்ளது.
குழந்தை தொழிலாளர்களுக்கு வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலில் அமர்த்த தடை உள்ளது. ஆபத்தான தொழில்களில், 18 வயதுக்குட்பட்டோரை பணியில் அமர்த்தவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
உலக நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.இந்தியா, 2047ல் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, கடைசி குழந்தைக்கும் சுதந்திரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவை கிடைக்கும். என குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி கூறினார்.