இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து நம் நாட்டிற்கு முதலில் உதவியது ஜப்பான் நாடு.இந்தியாவுடன் அந்நாடு, 1952ல் நல்லுறவை துவக்கி, தொழில், முதலீடு என, பல வகைகளில் தொடர்ந்து உதவுகிறது. இத்தகைய நல்லுறவு ஏற்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
.இதை கொண்டாடுவதற்காக, காஞ்சிபுரம் ‘நிப்பான்’ வர்த்தக, தொழில் சபையினர், மாமல்லபுரம் கிராண்ட் பே விடுதியில் நேற்று முன்தினம் கூடினர்.சபை தலைவர் – காஞ்சிபுரம் இந்தியாவிற்கான ஜப்பான் துாதர் டாகா மாசாயுகி, ஓய்வுபெற்ற போலீஸ் திரைப்பட இயக்குனர் மிஷ்கின், நடிகர்கள் எஸ்.வி.சேகர், சூரி, சென்னை சுற்றுப்புற பகுதி ஜப்பானியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழ் திரைப்படப் பாடல், ஜப்பானிய பாரம்பரிய இசை இசைத்து, நடனமாடி விழா கொண்டாடினர்; ஜப்பானியர் குதுாகலித்தனர்.