ஸ்வராஜ் 75 கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு : ஆர்எஸ்எஸ்

0
300

 

புது தில்லி. “அமிர்த் மஹோத்சவ்” (ஸ்வராஜ்@75) கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், கொண்டாட்டங்களில் அற்ப அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது.

நியூஸ்பாரதி அறிக்கையின்படி, “அமிர்த மஹோத்ஸவா” க்கு சங்கம் ஏற்கனவே தனது ஆதரவை அறிவித்துள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகளால் தொடங்கப்படும் திட்டங்களில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அனைத்து ஸ்வயம்சேவகர்களையும் கேட்டுக் கொண்டதாகவும் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர் கூறினார்.

அமிர்த மஹோத்ஸவாவைக் கொண்டாடுவதில் யாரும் அரசியல் செய்து கவனம் செலுத்த வேண்டாம்”, என்று அம்பேகர் கூறினார், கொண்டாட்டங்களில் இருந்து தேசத்தின் கவனத்தை திசை திருப்ப முயன்ற அனைவரையும் புறகணிக்க வேண்டும் என்றார் .

ஸ்வராஜ்@75 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “திரங்கா அணிவகுப்பில்” பங்கேற்குமாறு பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு நாடு மிகவும் சாதகமாகவும் உற்சாகமாகவும் பதிலளித்தாலும், சில அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் ஆர்எஸ்எஸ்-ஐ குறிவைத்து கருத்துகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது ஆர்எஸ்எஸ் தலைமையகம் மற்றும் பிற அலுவலகங்களில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றுவதில் அது ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்றுவதில் அது ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here