காரைக்குடி ஜில்லா சாங்கிக்  தத்தாத்ரேய ஹொசபலே ஜி சிறப்புரை

0
266

காரைக்குடி. ஆகஸ்ட் 14. இன்று காரைக்குடியில் நடைபெற்ற ஜில்லா சாங்கிக்கில் ராஷ்டிரிய சுயம்சேவாக சங்கத்தின் அகில பாரத பொதுச் செயலாளர் மானனீய தத்தாத்ரேய ஹொசபலே  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சி தென் தமிழகத்தின் சிவகங்கை ஜில்லாவில் உள்ள காரைக்குடியில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக 14ம் தேதி மாலை 5மணிக்கு நடைபெற்ற 75வருட சுதந்திர அமுத பெருவிழாவின் நிகழ்வாக ஜில்லா சாங்கிக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தினுடைய சர்கார்யவாஹ் மானனீய ஶ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் ஷேத்ர சங்கசாலக் மானனீய டாக்டர் வன்னியராஜன் ஜி, ப்ராந்த சங்கசாலக் மானனீய ஶ்ரீ ஆடலரசன் ஜி, விபாக் சங்கசாலக் மானனீய ஶ்ரீ மங்கேஸ்வரன் ஜி ஜில்லா சங்கசாலக் மானனீய ஶ்ரீ நாச்சியப்பன் ஜி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஜில்லா முழுவதிலிருந்து 1200 ஸ்வயம்சேவகர்கள் சுப்ரவேஷில் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சி சரியாக மாலை 6:30க்கு நிறைவு பெற்றது.

தத்தாத்ரேய ஹொசபலே ஜி -யின்  சிறப்புரை : 

மானனீய க்ஷேத்ர சங்கசாலக் ஸ்ரீ  வன்னியராஜன்ஜி அவர்களே

விபாக் சங்கசாலக் ஸ்ரீ மகேஸ்வரன் ஜி அவர்களே

ஜில்லா சங்கசாலக் ஸ்ரீ நாச்சியப்பன் ஜி அவர்களே மற்றும் சங்க அதிகாரிகளே பிரியமான சங்க கார்யகர்தர்களே ஸ்வயம்சேவக் சகோதரர்களே அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நமது ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி பறக்க விடப்பட வேண்டும் கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பாரத சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டங்கள் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகிறது.

மகாராஷ்டிரா தெலுங்கானா சென்னை போன்று நான் பயணம் செய்து வந்த ஒவ்வொரு இடத்திலும் மக்கள் இந்த விழாவை ஒரு அற்புதமான உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் தேசபக்தியின் தீவிர வெளிப்பாடாகவும் கொண்டாடுவதை காண முடிகிறது.

கோடிக்கணக்கான மக்களின் பாரத பக்தியின் அடையாளமாகவும், சுதந்திரத்தின் ஆனந்தம் மூலம் உலகின் முதல் நிலைக்கு பாரதத்தைக் கொண்டு செல்வோம் எனும் உறுதியும் இதன் மூலம் நன்கு வெளிப்படுகிறது.

நாட்டின் விடுதலைக்காக வேலை செய்தவர்கள் பலிதானம் செய்தவர்கள் மூலமாக எந்த முயற்சி நடந்ததோ அதைப் பற்றிய ஒரு புத்தகம் இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது.  இதுவும் அதன் ஒரு தொடர்ச்சியே.

இன்று நாம் சுதந்திர காற்றை அனுபவிக்கிறோம் கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக அதே நேரத்தில் மிக உறுதியுடன் உலகில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் உலக அரங்கில் நமது மரியாதை அதிகரித்திருக்கிறது மதிப்பிற்குரிய உயர்ந்த இடமும் சக்தி படைத்த நாடாகவும் வியாபாரம் அறிவியல் கல்வி என பல துறைகளிலும் அதேபோல மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களை நீக்குவதிலும் பாரதம் ஒரு திடமான முடிவுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவே நாம் ஒரு பொன்மயமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்பொழுது புத்தகத்தை வெளியிடும்போது நமது பிரச்சார் ப்ரமுக் திரு சூரிய நாராயணன் அவர்கள் சொன்னது போல சுதந்திரப் போராட்டம் ஏதோ ஒரு பகுதியில் நடந்தது என்றில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கட்ச் முதல் காமரூபம் வரை இருந்தவர்களின் குரலாகவும் சிறியவர்கள் பெரியவர்கள் இளைஞர்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் ஆன்மீகப் பெரியோர்கள் ஆண்கள் பெண்கள் என வாழ்வின் அனைத்து பகுதி மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதற்கும் முன்பாக முகலாயர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டனர் பாரத ஒற்றுமை அதன் உள்ளார்ந்த சக்தி இதன் மூலம் வெளிப்பட்டது எந்த ஒரு நாட்டில் வரலாற்றிலும் இல்லாத ஒரு புரட்சி நமது இளைஞர்களின் பலிதானத்தின் மூலம் விடுதலை வேல்வியில் ஆகுதியாக செலுத்தப்பட்டது லோகமான்ய பால கங்காதர திலகர் லாலா லஜபதிராய் விபின் சந்திர பால் போன்ற தலைவர்களோடு ஆயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றனர். உலக வரலாற்றை ஒப்பிடும்போது இவையெல்லாம் நமக்கு பெருமிதம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

 எல்லையற்ற பராக்கிரமமும் உறுதியும் கொண்டு நாம் சுதந்திரத்திற்காக போராடினோம் குடிமக்களாகிய நாம் ஆகஸ்ட் 15ஆம் தேதி  கொடியேற்றி வைத்துவிட்டு நமது கடமை முடிந்து விட்டது என்பதாக கருதக்கூடாது.

விடுதலைக்காக வித்திட்டவர்கள் போராடியவர்கள் எந்த இலக்கிற்காக தியாகங்களைச் செய்தார்களோ அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் அவர்களின் வீர தீர செயல்களை நன்றியுடன் இன்றைக்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும் அதேபோல பாரதம் மகோன்னதமான நிலையை அடைந்திட வேண்டும் என்கிற அவர்களது கனவை நினைவாக்க நாம் முயற்சிக்க வேண்டும் அதேபோல மூன்றாவதாக இந்த அற்புதமான செய்தியை வரலாற்றை விடுதலைப் போராட்டக் கதையை நமது இளைஞர்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கும் இச்செய்தியை நாம் கற்பிக்க வேண்டும்

ஆர் எஸ் எஸ் இன் ஸ்தாபகர் பூஜனீய ஹெட்கேவார்ஜி விடுதலைக்கான போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றினார் புரட்சி பாதையிலும் அவர் தீவிரமாக செயலாற்றினார் ஒரு போர் வீரனாகவும் அதே போல சத்தியாகிரகியாகவும் விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு இருந்தது இதற்காக இரண்டு முறை சிறை வாசமும் அனுபவிக்க வேண்டி இருந்தது சங்கம் தொடங்கிய 1925 லிருந்து 1947 வரைக்கும் ஆன காலகட்டங்களில் விடுதலைக்காக நடந்த போராட்டங்களில் நமது ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் 1947 ஆகஸ்ட் 15க்கு பிறகும் பாரதத்தின் சில பகுதிகள் விடுதலை பெறாமல் இருந்த நிலையில் அதற்கான முழு முயற்சிகளையும்   போராட்டங்களையும் ஸ்வயம்சேவகர்கள் முன்னெடுத்தனர்.

ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம்களிடமிருந்தும்,   கோவாவை மீட்க போர்ச்சுக்கீசியர்களிடமிருந்தும்,  தாத்ரா நகர் வேலியை மீட்க பிரெஞ்சுகாரர்களிடமும் நாம் கடுமையாக போராடினோம். அதற்காக நமது ஸ்வயம்சேவகர்கள் சிறைவாசத்தையும் தண்டனையையும் கூட அனுபவித்தனர்.

அனைத்து விதமான மக்களும் நாம் தற்போது பணி செய்து கொண்டிருக்கிறோம் உண்மையோடும் சுயநலமற்ற உள்ளதோடும் பணி செய்து கொண்டிருக்கிறோம் விடுதலை வீரர்களின் கனவை நினைவாக்க நாம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.  பூஜனீய டாக்டர் ஹெட்கேவார்ஜியும் இதை நமக்கு சரியாகத்  திட்டமிட்டு பிரத்தியேகமான பாதையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

சங்கம் இதற்காக ஒட்டுமொத்தமான இந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டி இருக்கிறது காரணம் பாரதத்தின் அடையாளம் என்பது ஹிந்து சுவாமி விவேகானந்தர் பாரதத்தில் மட்டுமல்லாமல் உலக அரங்கில் தான் பயணித்த அனைத்து இடங்களிலும் இதை உறுதிபடச் சொல்லியிருக்கிறார் பாரதத்தை முன்னேற்ற பாரத தேசத்தை புனர்நிர்மாணம் செய்ய முழு சமுதாயத்திற்கு வழிகாட்ட நம்பிக்கை ஊட்ட ஹிந்து எனும் அடையாளம் நமக்கு அவசியமாகிறது

பாரதம் ஒரு பழமையான நாடு மிகப்பெரும் மக்கள் கூட்டம் கொண்ட நாடு இதன் பண்பாடு கலாச்சாரம் இவை அனைத்தும் ஹிந்துதன்மையின் வெளிப்பாடுகளே ஆகவே தான் உலகம் இதை ஹிந்துஸ்தானம் என்று அழைக்கிறது பாரதத்தின் அடையாளம் நம்பிக்கை இதன் மூலம்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது தற்போது தமிழ் கலாச்சாரம் பெங்கால் கலாச்சாரம் மலையாள கலாச்சாரம் பஞ்சாப் கலாச்சாரம் என்றெல்லாம் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தான் ஹிந்து கலாச்சாரம் என்று சொல்லப்படுகிறது இது வெவ்வேறு கலாச்சாரம் அல்ல.

ஒரு மளிகை கடையில் இரண்டு கிலோ 5 கிலோ மளிகை தாருங்கள் என்று கேட்டால் தரமாட்டார் நமக்குத் தேவையான பொருட்களை பட்டியலிட்டு அதைக் கேட்கும் போது மட்டுமே கடைக்காரர் தருவார். என்பது போலவே சைவம் வைணவம் பௌத்தம் சீக்கியம் அதேபோல் மொழிகள் மாநிலங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்தது தான் ஹிந்து சமுதாயம்.

சுவாமி விவேகானந்தர்,மகரிஷி அரவிந்தர்,சுப்பிரமணிய பாரதியார் போன்ற எண்ணற்ற தலைவர்களும் இந்த ஹிந்து அடையாளத்தை முன்னிறுத்தி தான் விடுதலைக்காக போராடினார்கள் பாரதத்தின் சக்தி என்பது ஹிந்து சக்தி பாரதத்தின் முன்னேற்றமே ஹிந்து முன்னேற்றம் பாரதத்தின் பிரச்சனைகள் சிந்து சமுதாயத்திற்கான பிரச்சனைகள் எனவே ஹிந்து சமுதாயத்திற்காக நாம் செய்வதுதான் பாரத சமுதாயத்திற்காக செய்வது.

சங்க வேலை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் தனது நூற்றாண்டினை நிறைவு செய்யவிருக்கிறது.

இந்நேரத்தில் தேசத்தில் பஞ்சம் புயல் வெள்ளம் சுனாமி பெருந் தொற்று என பெரும் துயரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் ஜாதி மொழி மதம் மற்றும் மாநில ம் போன்ற எந்த வேறுபாடுகளும் இன்றி ஏற்பட்டிருக்கும் சிரமங்களை நீக்க நாம் கடுமையாக பணி செய்தோம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சேவைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன கல்வி பெண்கள் முன்னேற்றம் கோ சேவை கிராம வளர்ச்சி குடும்ப விழிப்புணர்வு இன்னும் ஏராளமான பணிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலம் தேசத்தை  ஒருங்கிணைக்கும் பணியை நாம் முழுமூச்சுடன் ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோவிலை நிர்மாணிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நாம் மிகப்பெரிய பங்காற்றினோம் அதன் விளைவு இன்றைக்கு புனிதமான ஆலயம் அயோத்தியில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது எல்லையை பாதுகாப்பதில் காஷ்மீர் அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் உயிரைத் துட்சவன் என மதித்து ராணுவம் காவல்துறை ஆகியவற்றோடு இணைந்து தோளோடு தோள் கொடுத்து நாம் பணியாற்றி இருக்கிறோம்.

பண்பாட்டை காக்கும் பெரும் பணியிலும் நாம் அயராது முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணிகளை செய்வதற்காக நாம் எந்தவிதமான சான்றுதல்களையோ நிதி உதவியோ யாரிடத்திலிருந்தும் எதிர்பார்ப்பதில்லை தேசமே நமக்கெல்லாம் கொடுக்குது நாமும் சிறிது கொடுக்கப் பழகணும் என்கிற உயர்ந்த நோக்கோடும் அன்னையை நான் இன்னும் அதிகமாக தரவே விரும்புகிறேன் என்கிற உணர்வோடும் நாம் தேசத்திற்காக நமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் தேசபக்தர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நகர்புறமோ கிராமப்புறமோ எந்தப் பகுதியில் உள்ளவர்கள் இருந்தாலும் இப்போது நமக்கு முழுமையான ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் நம்முடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு அதற்கான பயிற்சியினை தினசரி ஷாகா தந்து கொண்டிருக்கிறது.

சங்க ஷாகா ஒரு சிறிய பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும் அதில் வரும் நமது சுயம் சேவகர்களுக்கு தேசத்தினுடைய முழுமையான காட்சி அங்கே காணக் கிடைக்கிறது. பாரதத்தின் முழுமையை நமது ஸ்வயம்சேவகர்கள் ஷாகாக்களில் உணர்கிறார்கள்.

வரக்கூடிய இரண்டு மூன்று வருடங்களில் எல்லா மண்டல்களிலும் நமது நேரடி வேலையை கொண்டு செல்ல முடிவு செய்து கொண்டு இருக்கிறோம்.  இதை யார் செய்வார்?

 இன்று ஸ்வயம்சேவர்களாக  இருக்கிற நாம்தான் நமது அருகாமை கிராமங்களுக்கு செல்ல வேண்டும் கிராமத்தை முன்னேற்ற நாட்டை முன்னேற்ற தேவையான முயற்சிகளை ஷாகாவின் மூலம் முன்னெடுக்க வேண்டும்.

உலகத்திற்கு பாரதம் ஆயுர்வேதம் அறிவியல் யோகம் பண்பாடு கலாச்சாரம் இன்னும் ஏராளமானவற்றை தந்திருக்கிறது இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து தருவதற்கு உலக அரங்கில் நாம் உறுதியுடன் நிலைத்து நிற்க வேண்டியது அவசியமாகிறது நமக்குள் நாமே முன்னேறியவர்கள் பிற்பட்டவர்கள் என்கிற பேதங்களைக் கொண்டோ தீண்டாமை போன்ற மிகப்பெரிய களங்கங்களை வைத்துக் கொண்டோ இதை நாம் நிறைவேற்றிட முடியாது இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறான். என்கிற உணர்வோடு நாம் கடமையை ஆற்றும் போது பாரதம் சக்தி படைத்த தேசமாக நிச்சயம் மாறும்.

நமது சமுதாயத்தின் மிகச்சிறிய அளவீடு என்பது நமது குடும்பங்களே ஆகும் இந்துத்துவத்தை நமது குடும்பங்களில் முழுமையாக நாம் கொண்டு வர வேண்டும் உலக அரங்கில் பாரதத்தின் குடிமக்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் குடும்பங்கள் அதில் இருக்கிற ஹிந்து தன்மை எனவே ஹிந்து நறுமணத்தை நாம் பரப்பிட வேண்டும் ஒட்டுமொத்த சமுதாயத்தை முன்னேற்றமும் அதன் மூலம் பாரதத்தை முன்னேற்றமும் இந்த குடும்ப முன்னேற்றம் என்பது அவசியமாகிறது நமது பகுதிகளில் 10 15 குடும்பங்கள் ஒருங்கிணைந்து இதற்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை திட்டமிட வேண்டும்.

கோமாதா பாதுகாக்கப்பட்டால் தேசம் பாதுகாக்கப்படும் நமது ஆலயங்கள் பாதுகாக்கப்படும் போது தேசம் பாதுகாக்கப்படும் நமது தாய்மொழி பாதுகாக்கப்படும் போது தேசம் பாதுகாக்கப்படும் அதேபோல் நமது ஹிந்து தன்மை பாதுகாக்கப்படும் போது தான் அனைத்து தரப்பு மக்களும் இயற்கையின் வெளிப்பாடுகளான மலைகள் நதிகள் என சகலவிதமானவைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் சிந்துவின் வாழ்வியல் விழுமியங்களை பாதுகாக்க சங்க ஷாகா மூலமாக பெரும் முயற்சி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

நாம் ஒருங்கிணையும்போது நம்மமீது ஏற்படுத்த கொடுக்கப்பட்டிருக்கிற ஆக்கிரமிப்புகள் விலகும் தேசத்தையே குழி தோண்டி புதைத்திட செய்யப்பட்டு இருக்கும் முயற்சிகள் ஒழிக்கப்படும் மதமாற்றம் தடுக்கப்படும் ஆகவே விழிப்புணர்வு பெற்ற ஒருங்கிணைந்த பெருமிதமான சமுதாயத்தை நாம் நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது ‌

இந்தப் பொன்மயமான நேரத்தில் ஹிந்துவாகப் பிறந்தது நமது பெரும் பாக்கியம்.

 75 ஆவது ஆண்டு விடுதலை தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இருப்பது பெரும் பாக்கியம் ராஷ்டிரிய சுயம் சேவக சங்கத்தின் உறுப்பினராக இருப்பது மிகப்பெரும் பாக்கியம் இதில் பாரதத்திற்காக வாழவும் வீழவும் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நிமிடமும் நாம் தயாராக இருப்போம் இதன் மூலம் பாரதத்தின் விதியை வடிவமைப்பவர்களாக நமது வாழ்வை அர்ப்பணிப்பதற்கு தயாராகி பணி செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here