உத்தர பிரதேசத்தில், டெல்லி லக்னோ இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கச்சியானி கேரா கிராமத்தில் அமைந்துள்ள ஹனுமன் கோயில் ஒன்று இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த பாபு அலி என்ற முஸ்லிம் நபர், சாலையிலிருந்து சற்றுத் தள்ளியுள்ள தனது நிலத்தில் அந்த கோயிலை இடம் மாற்றி அமைத்துக் கொள்ள நிலத்தை தானமாக வழங்கினார். கோயில் அந்த பகுதிக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. ‘பாபு அலி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறார்,” என, மாவட்ட துணை ஆட்சியர் ராசி கிருஷ்ணாவும் அப்பகுதி மக்களும் புகழ்ந்தனர்.