1. முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1908 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் பிறந்தார்.
2. ஆன்மிகவாதி, சாதி பாகுபாட்டை எதிர்ப்பவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்.
3. நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பினார்.
4. 1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.
5. அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர், விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார்.
6. தேசியமும் தேவீகமும் இரு கண்கள் என்று வாழ்ந்தவர்.
7. ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக, அவற்றை வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.