ஹைதராபாத்திலுள்ள ஐ.பி.எஸ் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர் ஹிமாங் பன்சால் என்ற ஹிந்து மாணவரை கடந்த 2ம் தேதி, அதே கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக தாக்கினர். ஹிமாங் பன்சாலை ‘அல்லாஹூ அக்பர்’ என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினர். வேறு வழியின்றி பன்சாலும் அல்லாஹூ அக்பர் என்று கூறினார். அத்துடன் அவரை விடாத அந்த கும்பல், அவரை எட்டி உதைத்தும், அவர் மீது ஏறி அமர்ந்தும் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தாலோ அல்லது யாரிடமாவது சொன்னாலோ, கொலை செய்து உடலை கண் காணாத இடத்தில் வீசி விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து பன்சாலின் பெற்றோரும், உறவினர்களும், ஹிந்து அமைப்பினரும் கல்லூரி நிர்வாகத்திடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது, காவல்துறையினர் ராகிங் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்து மதவாத செயல்பாடு, மதவெறுப்பை தூண்டுதல், கட்டாயப்படுத்துதல் போன்ற பிரிவுகளை தவிர்த்துள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக, முன்னர் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில், புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய கல்லூரி நிர்வாகத்தின் ஒன்பது உறுப்பினர்கள் மீதும்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.