ஜி20 அமைப்பின் தலைமையை நேற்று முறைப்படி பாரதம் ஏற்றது. அடுத்த ஓராண்டுக்கு பாரதம் ஜி20 தலைவராக இருந்து அந்த அமைப்பை வழிநடத்தும். இதனையடுத்து, தொல்லியல்துறையின்
கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சை பெரிய கோயில் உட்பட நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய நினைவுச் சின்னங்களை ஜி20 லோகோவால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும்50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.