மத மாற்ற சக்திகளின் முக்கிய இலக்குகள்

0
208

சட்டவிரோத கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரான மனுவை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் சி.டி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ மனுவில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய, “இந்த பிரச்சினையில் உள்ள சட்ட வெற்றிடத்தை குறிப்பிட்டு, இது “சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் கும்பல், நெறிமுறையற்ற, கொள்ளையடிக்கும் மதமாற்ற உத்திகளை பயன்படுத்த வழிவகுக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் வெளிநாட்டு நிதியுதவி பெறும் மிஷனரிகள் மற்றும் மதமாற்ற குழுக்களின் முக்கிய இலக்குகள். ஆனால் பிரிவு 15(3)ன் அடிப்படையில் மத மாற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தகைய மோசடியான மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான பினாமி சொத்துக்கள் மற்றும் விகிதாசார சொத்துக்களை பறிமுதல் செய்ய மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டார். மேலும், மத மாற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நடவடிக்கைகளைத் தடுக்க வெளிநாட்டு நிதியுதவி பெறும் என்.ஜி.ஓக்கள் மற்றும் தனிநபர்களுக்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (எப்.சி.ஆர்.ஏ) விதிகளின் மறுஆய்வு, மத மாற்றங்களுக்கு ஹவாலா மற்றும் பிற வழிகளில் நிதியுதவியைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள், சட்டவிரோத மோசடியான மத மாற்றத்தைத் தடுக்க தகுந்த சட்டம் மற்றும் வழிகாட்டுதல்கள் உட்பட பல்வேறு நிவாரணங்களை அஸ்வினி உபாத்யாய இந்த மனுவில் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here