பாரத் மற்றும் ஜப்பான் இணைந்து ராணுவ பயன்பாட்டிற்கான லித்தியம் ஐயான் பேட்டரி களை தயாரிக்க இணைந்து செயல்பட உள்ளன. இதற்காக மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனமான தோஷிபா ஆகியவை இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. தற்போது வழக்கத்தில் உள்ள லெட் ஆசிட் பேட்டரிகளை பயன்படுத்தும் பல்வேறு ஏவுகணைகளில் லிதியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்தலாம். இதன் காரணமாக எடை குறையும். ஒரு லெட் ஆசிட் பேட்டரி வைக்கும் இடத்தில் இரண்டு லித்தியம் ஐயான் பேட்டரிகளை வைக்க முடியும். மேலும் லித்தியம் ஐயான் பேட்டரிகள் அதிக சக்தியை அளிப்பவை என்பதும் இன்று உலகில் இவை தான் முன்னனியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.