தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் உறுதியான பற்று பற்றி
சிறந்த கருத்துக்களைக் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி சிவாஜியை வளர்த்தார்.
முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த கொடுமையில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்று சிவாஜிக்கு எண்ணத்தை ஏற்படுத்தி வளர்த்தார்.
இந்துக்கலாச்சாரத்தின் மீதான அவரின் பற்றும், பொறுப்பும், அத்துடன் சிறந்த புராணங்களான மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றில் இருந்து எடுத்துக்கூறிய கதைகளும் சிவாஜியின் பண்பை வடிவமைத்தன.
சிவாஜி மராத்தியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டு இந்து சாம்ராஜ்யம் அமைத்தார்.
ஜிஜாபாய் சிவாஜியை வீரத்துடன் வளர்த்த முறைகள் குறித்தான நாட்டுப்புற பாடல்கள் மகாராட்டிரா மாநிலத்தில் பாடப்படுகிறது.
2011 – ஆம் ஆண்டில் ஜிஜாபாயின் வரலாறு குறித்தான இராஜமாதா ஜிஜாபாய் எனும் திரைப்படம் வெளியிடப்பட்டது.
ஜிஜாபாய் போன்று நாமும் வீரத்துடனும், தீரத்துடனும் நம் குழந்தைகளையும் வளர்ப்போம்… தேசம் காப்போம்.